வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (19:22 IST)

நீண்ட நேரம் தூங்கிய பெற்றோரை அடித்துக் கொன்ற மகன்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா. தாலூகா முத்தினகொப்பா அருகே உள்ள ஆல்தூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சித்தப்பா. இவருக்கு  65 வயது. இவரது மனைவி பர்வதம்மா( 57 வயது).  இவர்களுக்கு நாகராஜ் என்ற மகள் உள்ளார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும்  ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  குடிப்பழக்கம் கொண்ட நாகராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வந்த அவர் தன் அம்மா, அப்பாவிடம் தகாறில் ஈடுபட்டார்.

பின்னர் வெளியே சென்ற அவர் காலையில் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது, அவரது அம்மா, அப்பா இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.  நீண்ட நேரம் அவர்கள் தூங்கியதால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், அருகில் இருந்த விறகுக் கட்டையை எடுத்து அம்மா, அப்பா என்றுகூட பார்க்காமல் அவர்களை அடித்தார்.

இதில், இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களின் கதறல் சத்தம் கேட்டு, அருகில் வசிப்போர் வந்து, அவர்களை  மீட்டு  இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதில், நாகராஜின் அம்மா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது சித்தாப்பாவுக்கு என்.ஆர்.புரா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பியோடிய நாகராவை தேடி வந்தனர். அப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.