செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (14:33 IST)

விவசாய நிலத்தில் தரையிறங்கிய பயிற்சி விமானம்...விமானிகள் காயம்

small flight
தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால் பயிற்சி விமானம் ஒன்று விவசாய நிலத்தில் தரையிறங்கியது.

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள பெலகாவின் ஹொன்னிஹாலில்  உள்ள ஒரு திறந்தவெளி விவசாய நிலத்தில், பயிற்சி விமானம் ஒன்று திடீரென்று தரையிறங்கியது.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, இந்தப் பயிற்சி விமானம்  புறப்பட்ட  சில நிமிடங்களிலேயே பெலகாவின் ஹொன்னிஹாலில் உள்ள திறந்த வெளி விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது.

இதில், விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உட்பட இருவர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமானப்படை தொழில்நுட்க்குழு ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.