திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜூலை 2022 (17:15 IST)

துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: சோனியாவுக்கு நெருக்கமானவர் வேட்பாளராக அறிவிப்பு!

margaret alva
துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: சோனியாவுக்கு நெருக்கமானவர் வேட்பாளராக அறிவிப்பு!
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் குடியரசுத் துணை தலைவர் பாஜக கூட்டணி வேட்பாளராக ஜெக்தீப் தங்கர் என்பவர் நேற்று அறிவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன்னர் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா மத்திய அமைச்சராகவும் ஆளுனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது  இவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது