1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. ED send summon to sonia gandhi

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தி ஆஜராக சம்மன்!

sonia gandhi
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சமீபத்தில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்பதும், அந்த சம்மனுக்கு ராகுல்காந்தி ஆஜர் ஆனார் என்பதும் தெரிந்ததே. 
 
ஆனால் சோனியா காந்தி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை 
 
இந்த நிலையில் தற்போது சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதை அடுத்து வரும் 21ஆம் தேதி சோனியாகாந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த சம்மனுக்கு  வரும் 21ஆம் தேதி சோனியாகாந்தி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
தேவை முடிந்ததும் ஓபிஎஸ்ஸை கழட்டி விட்டுள்ளார் எடப்பாடி: திவாகரன்