செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (07:50 IST)

ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்: போட்டி போட்டு அஞ்சலி செலுத்தும் அதிமுக-அம்முக

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானதை அடுத்து இன்று இரண்டாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதிமுக மற்றும் அமமுக தலைவர்கள் போட்டி போட்டு நினைவு ஊர்வலம், தர்ப்பணம் கொடுத்தல் ஆகியவைகளை நிகழ்த்தி வருவதால் பரபரப்பு ஏறப்ட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வெவ்வேறு நேரத்தில் அமைதி ஊர்வலம் நடத்தவுள்ளனர். முதலமைச்சர் எட்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர்கள் இன்று காலை பத்து மணிக்கு வாலாஜா சாலை வழியாக பேரணியாக சென்று இறுதியில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனையடுத்து வாலாஜா சாலை முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அமைதியாக ஊர்வலம் சென்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.