செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2023 (07:36 IST)

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்.. டெல்லி எல்லையை முற்றுகையிட திட்டமா?

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லை செய்த எம்பிஐ கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் நிலையில் அடுத்த கட்டமாக டெல்லி எல்லையை முற்றுகையிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக தற்போது விவசாய சங்கங்கள் களமிறங்கியுள்ளனர். 
மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்க குடியரசு தலைவரை விவசாய சங்கங்களையும் பிரதிநிதிகள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக குடியரசு தலைவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அதுமட்டுமின்றி டெல்லி எல்லையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த திட்டம் இடப்பட்டு இருப்பதாகவும் முற்றுகையிடம் போராட்டம் நடக்கும் தேதி என்று அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva