புதிய கட்சி தொடங்க 7 நாட்கள் போதும் - தேர்தல் ஆணையம்
புதிய கட்சிகள் தொடங்க முதலில் 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் தற்போது 7 நாட்களில் புதிய கட்சிகள் தொடங்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தால் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தியுள்ளது. அதேசமயம் மற்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்திலும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டிலும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஒரு புதிய கட்சியைத் தொடங்க இனிமேல் 30 நாட்கள் காத்திருக்க வேண்டியத நிலையில் அதனை 7 நாட்களாகக் குறைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்தியத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் இந்தப் புதிய உத்தரவு தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெரும் 5 மாநிலங்களுக்குப் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.