புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 மார்ச் 2021 (17:55 IST)

அஜித் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் ஹீரோ ஆர்.ஜே.பாலாஜி

ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து பின்னர் தீயா வேலை செய்யனும் குமாரு, உள்ளிட்ட படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் ஆஜே.பாலாஜி.
 
இவர் ஹீரோவாக நடித்த முதல்படம் எல்.கே.ஜி. இப்படம் வெற்றி பெற்ற நிலையில் கடந்தாண்டு இவரது இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் வெளியானது.
 
இந்நிலையில், அமித்ஷர்மா இயக்கத்தில் ஆயுஸ்மான் குரானா நடிப்பில் கடந்த 208 ஆம் ஆண்டு வெளியான படம் பதாய் ஹோ.
 
இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றிபெற்றது. அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
இப்படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டியிருந்த நிலையில் பதாய் ஹோன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியிருக்கிறார்.
 
இப்படத்தினை ஆர்.ஜே பாலாஜி இயக்கி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.மேலும், இப்படத்தில் நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகிறது.