திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (13:37 IST)

’அந்த விவகாரம்’ : ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் புது உத்தரவு...

கற்பழிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் பெயர் மற்றும் அவர்கள் அடையாளம் முகவரி போன்றவற்றை  வெளியிட கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையிலான அமர்வு இன்று கூறியுள்ளதாவது:
 
கற்பழிப்பு மற்றும் பாலியல் புகார் , பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் அடையாளங்கள் அச்சு மற்றும் மின்னு ஊடகங்களை வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளது.
 
மேலும் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யும் போது சிறுவர்கள் போன்ற முக்கிய குற்றவாளிகளின் பெயர்களை போலீஸார் வெளிப்படையாக பதிவிட கூடாது எனவும் உத்தரவிட்டுள்ள அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதை துரதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.