திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (13:41 IST)

நிர்மலாதேவி விவகாரம்: உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனு குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி  மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை  நிர்மலா தேவி,  துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி  மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விசாரிக்கப்பட்டு  வருகின்றனர்.
 
இந்நிலையில் கருப்பசாமியின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. கருப்பசாமியின் தரப்பிலிருந்து இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு குறித்து இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கருப்பசாமியின் ஜாமின் மனு குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் நிர்மலாதேவி தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.