வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (10:53 IST)

தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீரை கூட திறந்து விட முடியாது - கர்நாடக முதல்வர் சித்தராமையா

தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீரை கூட திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட கூறியுள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் 11,500 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்திருந்த நிலையில் தினசரி 8000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீரை கூட திறந்து விட முடியாது என கூறியுள்ளது தமிழக அரசுக்கும், தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, காவிரி நீரை வழங்க உத்தரவிடும்படி சமீபத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்திய நிலையில் கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு பிறகு தமிழக அரசின் சார்பில் இதற்கு என்ன பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran