1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (16:55 IST)

மேகதாது அணை கட்ட நம்மகிட்டயே அனுமதியா? கர்நாடகாவுக்கு தில்லு பாத்தியா..!!

TK Sivakumar
மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
 
காவிரியின் குறுக்கு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடுக்கப்படும் என்றும் அணைக்கட்டு அனுமதி அளிக்க கூடாது என்றும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
 
இந்நிலையில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 
 
ஆனால் தமிழகத்திடம் என்னுடைய ஒரே கோரிக்கை என்றும் மேகதாது நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அணையால் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரண்டு மாநிலமும் சரிசமமாக பலனடையும் என்று அவர் கூறியுள்ளார். 

 
இரண்டு மாநிலங்களின் செழிப்புக்கும் இந்த நடவடிக்கை அவசியம் என்றும் மேகதாது நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழகம் பச்சைக் கொடி காட்டி, பிராந்தியத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்கு பங்களிக்கும் என்று நம்புகிறேன் என்றும் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.