ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (07:37 IST)

திமுகவுக்கு அடுத்த தேர்தலில் ஆதரவு கொடுக்க மாட்டேன்: பா ரஞ்சித் அறிவிப்பு.!

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் இதே ரீதியில் தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டேன் என இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்த பா ரஞ்சித் ஆவேசமாக சில கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அவர் திமுக அரசு குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடந்த திரைப்பட விழாவில் திமுகவுக்கு வாக்களித்தால் ஏதேனும் மாற்றம் வரும் என்றுதான் நினைத்து வாக்களித்தேன். ஆனால் திமுக, அதிமுக எந்த ஆட்சி வந்தாலும் தலித் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங்கின் நிலை மீண்டும் நீடித்தால் திமுகவுக்கு அடுத்த தேர்தலில் ஆதரவு கொடுக்க மாட்டேன் என்றும் இது ஒரு எச்சரிக்கை என்றும் இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராக பா ரஞ்சித் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக  கூறப்படும் நிலையில் அவரது இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva