1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (22:46 IST)

இரவு நேரப் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதிய பெண் !

கல்வி கற்பதற்கு வயது வித்தியாசம் தேவை இல்லை. சமீபத்தில் ஒரு முதியவர் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.

இந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா மா நிலத்தில், உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தன் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு தெரியாமல்,  இரவு நேரப் பள்ளிக்குச் சென்ற கல்பனா 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவரைப் பாராட்டி இவரது மகள் தனது டுவிட்டர் பக்கத்தில் இதைப் பதிவிட்டுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.