1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (13:47 IST)

சன் டிவியுடன் சண்டைக்கு சென்ற திரிஷா?

சமீபத்தில் வெளியாகி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 96 படம் வரும் தீபாவளி நாளன்று சன் டிவியில் ஒளிபரப்படுகிறது. இதனை எதிர்த்து படத்தின் நாயகி திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 
 
பிரேம் குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, திரிஷா ஆகியோரின் பிரதான நடிப்பில் கடந்த மாதம் வெளியானது 96 திரைப்படம். காதலை மட்டுமே மையப்படுத்தி வெளியான இப்படம் அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை டிவியில் தீபாவளி அன்று ஒளிபரப்புவதாக சன் டிவி அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் பலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் இதற்கு படத்தின் நாயகி திரிஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 
டிவிட்டரில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 96 திரைப்படம் ஐந்தாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. இப்போதும் கூட தியேட்டர்களில் 80 சதவீத இருக்கைகள் நிரம்புகின்றன. 
 
இந்த சூழ்நிலையில், சன் டிவியில் 96 திரைப்படத்தை இவ்வளவு விரைவில் ஒளிபரப்பு செய்வது சரி இல்லை. திரைப்படத்தை பொங்கல் நாளில் வெளியிட வேண்டும் என்று சன் தொலைக்காட்சியை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால் அது சிறப்பாக அமையும் என பதிவிட்டு #Ban96MoviePremierOnSunTv என்ற ஹேஸ்டேக் வெளியிட்டுள்ளார்.