செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (13:26 IST)

சூர்ப்பனையின் கொடும்பாவிகள் எரிப்பு - கணவர்கள் கொண்டாடிய விசித்திர தசரா விழா!

அவுரங்காபாத்தில் மனைவிகளால் பாதிக்கப்பட்டு வாழ்வை இழந்த கணவர்கள் ஒன்றுகூடி  சங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அந்த சங்கத்தை சேர்ந்த கணவன்மார்கள் விசித்திரமான தசரா விழாவை கொண்டாடி வருகின்றனர். 
தசரா பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வட இந்தியாக்களில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 
 
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கரோலி என்ற கிராமத்தில் மனைவிகளால் பல கொடுமைகளை அனுபவித்து பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் ஒன்றுகூடி ராவணனுக்கு பதிலாக சூர்ப்பனகையின் உருவபொம்மையை எரித்து விசித்திரமான தசரா பண்டிகையை கொண்டாடினர். 
இந்த விழாவின் முக்கிய நோக்கமே, தீமையை அழித்து நன்மையை வெல்வது தான் ஆனால், தங்களின் மனைகளால் அனுபவித்த கொடுமைகளை எண்ணி சூர்ப்பனகை உருவ பொம்பைகளை எரித்து ஆண்களுக்கு நிம்மதியும் நியாயமும் கிடைக்க போராடுகிறோம் என்று அந்த கணவர்கள் தெரிவித்தனர்.