1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (11:17 IST)

குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை!!! என்ன காரணம்?

உத்திரபிரதேசத்தில் முதியவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த குரங்குகள் மீது வழக்குப் பதிவு செய்ய அவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
உத்திரபிரதேச மாநிலம்  பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங்(72). இவர் தன் வீட்டினருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது, அப்பகுதிலிலிருந்த சில குரங்குகள் இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் தரம்பால் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்நிலையில் தரம்பாலின் உயிரிழப்பிற்கு காரணமாக குரங்குகள் மீது வழக்குப் பதிய வேண்டும் என அவரது உறவினர்கள் போலீஸாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். குரங்குகள் மீதெல்லாம் வழக்குகள் பதியமுடியாது என போலீஸார் கூறியதால் அடுத்து என்ன செய்வது என தரம்பலின் உறவினர்கள் யோசனை செய்து வருகின்றனர்.