1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (13:19 IST)

பாலியல் குற்றவாளி நானா படேகருடன் பிரபல நடிகர்கள் நடிக்க மறுக்கின்றனர் - சத்ருகன் சின்ஹா

பாலியல் குற்றம் சாட்டுபவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர பாதிக்கப்பட்டவர்கள் சட்டப்படி நீதிமன்றத்திற்கு செல்லட்டும் என்று நடிகர் சத்ருகன் சின்ஹா கேட்டுக்கொண்டுள்ளார். 
சமீபத்தில் நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான , சுபாஷ் கய், நடிகர்கள் நானா படேகர், அலோக் நாத் போன்றவர்களுடன் பெண் இயக்குனர்கள் சிலர் அவர்களுடன்  பணியாற்றப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். மேலும் பிரபல நடிகர் அமீர்கான், அக்சய் குமார் போன்றவர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பணியாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
 
இதனால் வேறு வழியின்றி ஹவுஸ்புல் 3 போன்ற படங்களில் இருந்து நடிகர் நானா படேகர் வெளியேறினார். 
 
ஆனால், இதற்கு எதிராக நடிகர் சத்ருகன் சின்ஹா முரண்பாடான கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது, நடிகர் சஞ்சய் தத் குற்றவாளியாக சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு திரும்பியபோது திரையுலகம் அவரை ஏற்றுக் கொண்டதை சுட்டிக் காட்டியுள்ள அவர்,பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பணியாற்ற மறுப்பது தவறு என்றும்  நடிகர் சத்ருகன் சின்ஹா பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.