1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (15:10 IST)

பெண் தொழிலாளியை அடித்து விரட்டிய நிர்வாகி ! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான மாணவிகளின் விடுதியில் தனது குழந்தையுடன் தங்கியிருந்த பெண் துப்புரவு தொழிலாளியை, பள்ளி மேற்பார்வையாளரின் கணவர் அடித்து துரத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாகிவருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொரியா கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருவது பர்வானி கன்யா ஆஸ்ரம் இங்கு ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த ஆசிரத்து விடுதியில் திடீரென்று ஒரு பெண் துப்புரவுத் தொழிலாளி சந்திர காந்தா என்பவர் தன் குழந்தையுடன்  வந்து தங்கியிருந்ததாகத் தெரிகிறது. இதனைக் கண்டறிந்த விடுதி மேற்பாளர் சுமிலா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் , உடனே இங்கிருந்து காலி செய்யும் படி கூறியுள்ளார். ஆனால்  அவர் போக மறுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் சுமிலா தன் கணவரிடம் இவ்விஷயத்தை கூறியுள்ளார். 
 
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி சுமிலாவின் கணவர் விடுதிக்குள் நுழைந்து, சந்திரகாந்தாவை வெளியே போகும் படி கூறியுள்ளார், அதற்கு அவர் மறுக்கவே அவர் விடாப்பிடியாக தரத்தரவென இழுத்து, அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளார், இக்காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்போது தலைமறைவாகியுள்ள சுமிலாவின் கணவர் ரங்லால் சிங் தலைமறைவானதை அடுத்து போலீஸார் அவரை தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.