ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (13:17 IST)

ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிப்பு- தமிழக அரசு

st  George port-tamilnadu
ஒவ்வொருமுறையும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு கூறியுள்ளது.
 
தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்வதாகவும் தேர்வு குழு தொடங்கி தேவையில்லாமல் நுழைவதாக கூறி தமிழக அரசு 2 வது மனுவை  ஆளுநருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலதாமதம் செய்வதை சுட்டிக்காட்டி ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? என ஆளுநருக்கு எதிராக  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில்,  தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரோத்தகி மற்றும் வில்சன் ஆஜராகியுள்ளார்.

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுகின்றனர் என வழக்கறிஞர் வில்சன் குறிப்பிட்டார்.

அதேபோல்  கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 13க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்கிறார்  என வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் காரணமும் கூறாமல் மசோதாக்களை  ஆளுநர் நிராகரித்துள்ளார். ஒவ்வொருமுறையும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருக்க முடியாது என தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.