வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (14:33 IST)

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ?- உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்வதாகவும் தேர்வு குழு தொடங்கி தேவையில்லாமல் நுழைவதாக கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 2 வது மனுவை  ஆளுநருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலதாமதம் செய்வதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில்  மேலும்  ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? என ஆளுநருக்கு எதிராக தமிழ் நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பியுள்ளார்.