1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஜெ.துரை
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (12:30 IST)

அணை நீர் வரத்து கால்வாய்கள்‌ அடைப்பு: நடவடிக்கை எடுக்க பாஜக மனு!

அணையை தூர் வாரி, ஷட்டரை பழுது பார்க்க வேண்டும் என பிஜேபி மதுரை மாவட்ட விவசாய அணி சார்பில் மாநில துணைத்தலைவர்‌‌ ஆட்சியரிடம் மனு.


அணைக்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள்‌ மர்ம‌ நபர்கள் அடைத்து வைப்பதை‌ தடுக்க‌ நடவடிக்கை  எடுக்க பிஜேபி மதுரை மாவட்ட விவசாய அணி சார்பில் மாநில துணைத்தலைவர்‌‌  மாவட்ட ஆட்சியரிடம் மனு. மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத்துணை தலைவர் முத்துராமன் புறநகர்‌மாவட்ட தலைவர் ராஜநரசிம்மன்  மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்‌.

அதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ள சாத்தியார் அணை மொத்தம் 29 அடி ஆழம் கொண்டது. இதில் பல வருடங்களாக 10 அடிக்கு மேல் வண்டல் மண் படிந்துள்ளதால் அணையின் கொள்ளளவானது வெறும் 19 அடிக்கு கீழே உள்ளது  இந்த அணையை தூர் வாருவதற்கு விவசாயிகள் கடந்த 20 வருடங்களாக அரசிடம் கோரிக்கை  வைத்து வருகிறார்கள்..

மேலும் கடந்த ஏழு வருடமாக அணையின் ஷட்டரில் ஏற்பட்டுள்ள பெரிய ஓட்டையால் கடந்த ஒரு வருடமாக அணையில் நீரை சேமிக்க முடியவில்லை.  இதன் காரணமாக கடந்த வருடம் இப்பகுதியில் உள்ள 4000 ஏக்கர். நிலத்தில் விவசாயிகள் நெல் பயிரிட முடியாமல் வேதனைப்படுகின்றனர்.

உடனடியாக சட்டருக்கு நிதி ஒதுக்கி அல்லது மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி சரி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்‌. அதோடு வனப்பகுதியை பாதுகாக்கும் நல்லெண்ணத்துடனும், சாத்தியார் அணை நீர் பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்ய வழிவகை செய்யும். வகையிலும் சிறுமலை பகுதியில்  சாத்தியார் அணை பாசன விவசாயிகளும், பிஜேபி மதுரை மாவட்ட விவசாய அணி மற்றும் பிற தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து மரக்கன்றுகளை சிறுமலை பாதுகாககப்பட்ட வனப்பகுதியில் நடுவதற்கு தாங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்றும்,

சாத்தியார் அணை பகுதியில்  அணையின் கீழே அமைந்துள் நான்காயிரம் ஏக்கர் நிலங்களுக்கு சரியான பாதை வசதி இல்லாததால் விளைபொருளை யும். இடுபொருளையும் தலையிலேயே சுமந்து செல்லும் அவல் நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர் இவர்களி நீண்ட கால கோரிக்கையான அணையில் இருந்து 10 கண்மாய்களுக் செல்லும் வாய்க்காலின் கரையில் ஒரு புறமாக தார் சாலை அமைத் தரும்படியும் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் சிறுமலையிலிருந்து சாத்தையார் நீர் வரத்து கால்வாய் ஓடைகளில் தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களாக விவசாயிகள் நீர் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுப்பணித்துறைக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர். 

 நீர் வரத்து ஓடைகளில் வரும் தண்ணீர் அடைக்கப்பட்டு சாத்தியார் அணைக்கு தண்ணீர் வருவதில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கறை கோவில் அருகில் உள்ள  ஆக்கிரமிப்பை அகற்றி அணைக்கு தண்ணீர் வர வழிவகை செய்ததன் பலனாக மூன்றே நாளில் அணை கால் பங்கு கொள்ளளவை எட்டியது.

இந்த நிலையில் மீண்டும் வேண்டுமென்றே அடைக்கப்பட்டு, தண்ணீர் எதற்க்கும் பயன்படாமல் பாசன வயல்களே இல்லாத காட்டுநாயக்கன்பட்டி கணமாய்க்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இதனால்  விவசாயிகள் தினமும் மேலே சென்று அடைப்பை எடுத்து வருகிறார்கள் மொத்தம் ஐந்து வரத்து கால்வாய் ஓடைகள் சாத்தையாறு அணைக்கு உள்ளன. ஐந்து வரத்து கால்வாய்களும் அடைபட்டுள்ளது.

சாத்தியார் அணையின் அனைத்து (மொத்தம் ஆறு) வரத்து கால்வாய்களை எப்போதும் தண்ணீர் வரும் வகையில் மர்ம நபர்கள் அடைக்காமல் இருக்கும் வண்ணம்  நடவடிக்கை எடுக்குமாறும்  சாத்தையாறு அணை மற்றும் முல்லை பெரியார் கால்வாய் இணைப்பு திட்டம் செயல்படுத்த கோரியும் சாத்தியார் அணைக்கு வைகை பேறணையிலிருந்து குழாய் (பைப்லைன்) மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்தி பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க அணையின் நீர் ஆதாரத்தை மேண்படுத்த வேண்டும் என மனு அளித்தனர்.

Edited By: Sugapriya Prakash