’’ஆரோக்கிய சேது செயலி’’யை உருவாக்கியவரை தெரியாது - மத்திய மின்னியல் அமைச்சகம்

arogya app
Sinoj| Last Modified புதன், 28 அக்டோபர் 2020 (16:01 IST)

ஆரோக்கிய சேதுவை உருவாக்கியவரை தெருயாது என மத்திய மின்னியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி முகக்கவசம், சானிடைசர் உபயோகித்தல், சமூக இடைவெளிகளைக் போன்றவற்றைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புள்ளவரைக் எளிதில் அடையாளம் காண ஒருவர் தனது செல்போனில் ஆரோக்கிய சேது என்ற ஆப்பை தரவிறக்கம் செய்துகொண்டால்
கொரோனா பாதிப்புள்ளவர்களை அடையாளம் காணலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலி குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மின்னியல் அமைச்சகம் இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியவர் யாரென்று தெரியாது எனப் பதிலளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :