1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kerala BJP President Announced; Tamil Nadu BJP President to be Declared Soon

கேரள பாஜக தலைவர் அறிவிப்பு.. தமிழக தலைவர் அறிவிப்பு எப்போது?

BJP
கேரள மாநில பாஜக தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவரும் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் பாஜக கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் மாநிலத்தின் புதிய தலைவர் பற்றிய ஆலோசனைகள் நடைபெற்றன. ஆலோசனையின் முடிவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கேரள மாநில தலைவராக பரிந்துரை செய்யப்பட்டார். அந்த பரிந்துரையை அடுத்து, அவர் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு, இன்றைய தேதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அவர் கேரள மாநில பாஜக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மூன்று முறை ராஜ்யசபா எம்பியாக இருந்த ராஜீவ் சந்திரசேகர், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, திருவனந்தபுரம் தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் சசிதரூர் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், கேரள மாநில தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்ததால் பரபரப்பு..!