1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 மார்ச் 2025 (15:42 IST)

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்ததால் பரபரப்பு..!

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி நடந்த போது, அந்த பெண் ரயிலில் இருந்து குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த 23 வயது பெண், ஹைதராபாத் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். தனது செல்போனை ரிப்பேர் செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத் வந்தார். அப்போது, ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

அவரிடமிருந்து தப்பிக்க, அந்த பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, ரயில் உடனே நிறுத்தப்பட்டு, அந்த பெண்ணை சோதனை செய்தபோது, அவருக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தது.

உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணிடம் அத்துமீறிய வாலியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran