வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (16:59 IST)

கார் விபத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ நீரஜா ரெட்டி உயிரிழப்பு

Accident
தெலுங்கானா மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ நீரஜா ரெட்டி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள கர்னூலின் ஆலூர் பாஜக பொறுப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவான பாட்டீல்  நீரஜா ரெட்டி, ஐதராபாத் நகரில் இருந்து கர்னூலுக்குச் சென்று கொண்டிருந்தபோது,  காரின் டயர் வெடித்து ஓட்டடுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த நீரஜா ரெட்டி( 52 வயது)  அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
neeraja reddy

அங்கு, மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவர், 2009 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.ஏல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டார்.பின்னர், 2019 –ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்த அவர் பின்னர், பாஜகவில் இணைந்து, பாஜக செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.