வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2023 (21:25 IST)

''திரிணாமுல் காங்., ஆட்சி கவிழ்ந்துவிடும்'' என்று அமித்ஷா கூறியது ஆணவமிக்கது- முதல்வர் மம்தா பானர்ஜி

பதவிக்காலம் முடியும் முன்பே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் பேசியுள்ளது ஆவணமிக்கது என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில் பிர்பூம் மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ’’நாடாளுமன்றத் தேர்தலில், மேற்குவங்கத்தில் உள்ள 35 இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் . மம்தாவின் ஆட்சி கலைக்கப்படும். தன் மருமகனை முதல்வராக்க மம்தா கனவு காண்கிறார் ’’என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து, முதல்வர் மம்தா பானர்ஜி, ’’என் ஆட்சியைக் கவிழ்க்க அமித்ஷா சதி செய்கிறார். மக்களவைத் தேர்தலில் 35 இடங்களில் பாஜக வென்றால் அடுத்தாண்டே திரிணாமுல் ஆட்சி கவிழும் என்று அமித்ஷா கூறுவது சட்ட விரோதமானது.  பதவிக்காலம் முடியும் முன்பே  எங்கள் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அமித்ஷா பேசியுள்ளது ஆணவமிக்கது. வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும்’’  என்று தெரிவித்ள்ளார்.