மனைவியின் மூக்கை கடித்த கொடூர கணவர்...

gujarath
Last Modified வெள்ளி, 19 ஜூலை 2019 (16:25 IST)
குஜராத் மாநிலம் கோடாசர் என்ற பகுதியில் வசிப்பவர் ரேஷ்மா குல்வானி ஆவார். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவரது கணவர் கைலாஷ் குமார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கைலாஷ் குமார்  சமீபகாலமாக வேலை இல்லாமல் இருந்ததால் விட்டில் விரக்தியில் இருந்துள்ளார். அதனால் குடும்பமும் வறுமையில் வடியுள்ளது. இந்நிலையில்  குல்வானியின் பர்சில் வைத்த ரூ. 3000 பணத்தை காணவில்லை என தெரிகிறது.
 
இதுகுறித்து குல்வானி தன் கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒருகட்டத்தில் கோபம் அடைந்த கைலாஷ்,தன் மனைவியை கீழே தள்ளி பலமாக அவரை தாக்கியுள்ளார். அத்துடன் அவரது மூக்கையும் கடித்து வைத்துள்ளார். 
 
இதில் வலிதாங்க முடியாமல் குல்வானி அலறியுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்கு வந்து காயமடைந்த குல்வானியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது ஐசியுவில் சேர்க்கப்பட்டுள்ள குல்வாவிக்கு மூக்கில் 25 தையல்கள் போடப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து குல்வானி போலீஸிடம் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் கைலாஷை கைது செய்த போலீஸார் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :