வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (08:50 IST)

திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை:குஜராத்தில் விசித்திரம்

உலகம் முழுவதும் மொபைல் போன் ஆக்கிரமிப்பில் இருந்து வரும் நிலையில் இன்றைய நாளில் மொபைல் போன் இல்லாத நபரை இல்லை என்று கூறலாம். மொபைல் போன்களால் பலவித நன்மைகள் இருந்தாலும் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் குறிப்பாக பெண்களுக்கு சில தொந்தரவுகள் மொபைல் போன்களால் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது
 
மேலும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை மொபைல் போன் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது இருப்பினும் பெண்கள், ஆண்களுக்கு இணையாக அதிக அளவில் தற்போது மொபைல் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குஜராத்தில் உள்ள ஒரு முக்கிய சமூகத்தில் உள்ள திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை அந்த சமூகத்தின் தலைவர்கள் பிறப்பித்துள்ளனர். இந்த சமூகத்தின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தபோது திருமணமாகாத பெண்கள் செல்போன் வைத்திருக்கக் கூடாது என்றும் அதேபோல் கலப்பு திருமணம் செய்தால் பெண்ணின் பெற்றோர்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் இரண்டு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
திருமணமாகாத பெண்கள் மொபைல்போன் பயன்படுத்துவதால் பாதுகாப்பின்மை ஏற்படுவதாகவும், மேலும் அவர்கள் படிப்பு உட்பட மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாது என்றும் அந்த சமூகத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். திருமணமாகாத பெண்கள் போன்களில் வீடியோ எடுப்பது அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதால் பல பிரச்சினைகள் ஏற்படுவதால் அதனை தவிர்ப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சமூகத்தின் தலைவர்கள் கூறினார்கள் இந்த சமூகத்தின் இந்த முடிவை அந்த பகுதியில் எம்எல்ஏ அம்பேத்கர் அவர்களும் வரவேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த சமூகத்தின் முடிவுக்கு பெரும்பாலான பெண்கள் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிப்பது தவறு என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.