செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (20:42 IST)

குஜராத்தில் முறிந்து விழுந்த ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ

குஜராத்தில் உள்ள தீம் பார்க்கில் பிரம்மாண்ட ராட்டினம் ஒன்று முறிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நிமிட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் அஹமதபாத்தில் பிரபலமான தீம் பார்க் ஒன்று உள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பலர் தீம் பார்க்கில் உள்ள ராட்டினங்களில் குழந்தைகளோடு சுற்றி மகிழ்ந்துள்ளனர். ஜாய்ரைட் எனப்படும் பிரம்மாண்ட ராட்டினத்தில் பலர் ஏறியுள்ளனர். ஊஞ்சல் போல பயணிகளை மொத்தமாக எடுத்து செல்லும் அந்த ராட்டினம் உயர செல்லும்போது தாங்கி செல்லும் ராடுகள் உடைந்து ராட்டினம் உயரத்திலிருந்து அப்படியே கீழே விழுந்தது.

இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் தீம் பார்க் நிறுவனர் உட்பட 6 பேர் மேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீம் பார்க் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இதுபோன்ற ராட்டின விபத்துகள் இந்தியாவில் அதிக இடங்களில் நிகழ்ந்துள்ளன.

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் விஜய் ரூபானி இதுபோன்ற தீம் பார்க்குகளில் உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.