புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (16:55 IST)

காதல் மனைவிக்கு தொல்லை கொடுத்த கணவன்.. மனைவியின் திடுக் முடிவு !

குஜராத் மாநிலம் சேர்ந்த ஷோயிப் என்பவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.  இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மிஸ்பா என்ற  பெண்ணைக் காதலித்துவந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்களின் காதல் திருமணத்திற்கு  இருவரின் வீட்டாரும் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஷோயிப்புக்கும், மிஸ்பாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து சில நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 
இதில், ஷோயிப் மிஸ்பாவை அடித்துக் கொடுமைசெய்துள்ளார். பின்னர் மனைவியின் வீட்டிற்குச் சென்று நகைகளை வாங்கிவரச் சொல்லியுள்ளார். இதனால் கணவனின் டார்ச்சர் தாங்கமுடியாமல், தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று நகைகளை வாங்கிவந்துள்ளார் மிஸ்பா.
 
அதைப் பெற்றுக்கொண்ட ஷோயிப், மீண்டும் மனைவி மிஸ்பாவை கொடுமைசெய்துள்ளார்.இதனால் மனமுடைந்த அவர் கணவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மனைவியின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த ஷோயிக் ன் மிஸ்பாவின் வீட்டுக்கு போன்செய்து உங்கள் மனைவி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறியுள்ளார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதில் ஷோயிப்பிடன் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தததால் போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.