1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஜூலை 2019 (16:32 IST)

மகள் முன்பு மறுமகனை வெட்டிக் கொன்ற மாமனார் : திடுக் சம்பவம்

குஜராத் மாநிலம் தண்டல் தாலுகா அருகில் இருக்கும் வர்மோர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஊர்மிளா என்பவர், கட்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஸ் சோலங்கி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டாரிடம் கூறியபோது இரு குடும்பத்தாரும் வேறுவேறு சமூகத்தவர்கள் என்பதால் இருவரின் வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதனைத்தொடர்ந்து ஊர்மிளாவும், ஹரிசும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர் . 
 
பின்னர் திருமணம் முடிந்து 8 மாதங்கள் தனியே வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஊர்மிளா கர்ப்பம் அடைந்துள்ளார். அதனால் அவரைப் பார்க்க அவரது பெற்றோர் வருவதாகக் கூறியிருந்தனர். ஆனால் நீங்கள் இருவரும் இங்கே வந்தால் சமாதானப் பேச்சு நடத்தலாம் என்பது போல் பேசி, ஊர்மிளா மற்றும்  ஹரிஸை ஊருக்கு வஞ்சகமாக வரவழைத்துள்ளனர்.
 
அவர்கள் ஊர்மிளாவில் வீட்டுக்குச் சென்றபோது, ஹரிஸ் சோலங்கியை, ஊர்மிளாவின் குடும்பத்தினர் வெட்டிப் படுகொலை செய்தனர்.
 
இந்தக் கொலை ஊர்மிளாவின் கண்முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஊர்மிளாவைக் காணவில்லை. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிந்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.