1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (12:01 IST)

நாய்க்கு சோறு வைக்காத தம்பி; அடித்து கொன்ற அண்ணன்! – கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவில் தனது செல்லமான வளர்ப்பு நாய்க்கு உணவளிக்காத தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயதான ஹக்கீம். இவருக்கு ஹர்ஷத் என்ற சகோதரர் ஒருவரும் உள்ளார். ஹக்கீம் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியூர் சென்ற ஹக்கீம் தனது தம்பி ஹர்ஷத்திடம் நாய்க்கு உணவு வைக்க சொல்லிவிட்டு சென்றுள்ளார்.


ஆனால் ஹர்ஷத் நாய்க்கு உணவு வைக்காததாக கூறப்படுகிறது. இதனால் திரும்ப வந்த ஹக்கீம் ஆத்திரத்துடன் தனது தம்பியை தாக்கியுள்ளார். பெல்ட் மற்றும் கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு தாக்கியதால் ஹர்ஷத்திற்கு எலும்புகள் உடைந்ததுடன், உள்காயங்களும் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஹக்கீம் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர். நாய்க்கு உணவு வைக்காததற்காக தம்பியையே அண்ணன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K