வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (10:48 IST)

ஒரு கொய்யாப்பழத்துக்காக கொலை..? உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் கொய்யாப்பழம் பறித்ததற்காக தலித் இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள மனேனா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். நேற்று காலை அக்கிராமத்தின் வயல் பகுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த தோட்டம் ஒன்றில் கொய்யாப்பழங்கள் பழுத்திருப்பதை கண்டு ஒன்றை பறித்துள்ளார்.

அதை அந்த தோட்டத்தின் உரிமையாளர்கள் பீம்சென் மற்றும் பன்வாரி ஆகியோர் பார்த்து விட்டு ஓம் பிரகாஷை பிடித்துள்ளனர். பின்னர் அவர்களும், கிராமத்தை சேர்ந்த வேறு சிலரும் சேர்ந்து ஓம் பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.


இதனால் மயங்கி விழுந்து கிடந்த ஓம் பிரகாஷை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து தோட்ட உரிமையாளர் மீது போலீஸார் எஸ்.சி\எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஒரு கொய்யாப்பழத்திற்காக தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K