வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (16:45 IST)

’உசுருக்கு ஒன்னுனா கரண்ட் கம்பில கூட ஓடுவோம்?’ – போலீசுக்கே தண்ணி காட்டிய சாகச திருடன்!

Kerala
கேரளாவில் பெண்ணிடம் வழிப்பறி செய்த திருடன் மின்சார கம்பிகளில் ஏறி சென்று போலீஸுக்கே தண்ணி காட்டிய சம்பவம் வைரலாகியுள்ளது.

கேரளாவில் உள்ள காஞ்சங்கோடு என்ற பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக பெண் ஒருவர் கடைவீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது வெளிமாநில இளைஞன் ஒருவன் அந்த பெண்ணின் நகையை பறித்துக் கொண்டு ஓடியுள்ளான்.

இதை கண்டு அங்கிருந்த மக்கள் அவனை துரத்தி சென்றுள்ளனர். உடனே அந்த இளைஞன் வேகவேகமாக அருகில் இருந்த மின்சார கம்பத்தில் ஏறியுள்ளான். இதுகுறித்து அறிந்த மின்வாரிய பணியாளர்கள் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் திருடனை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த திருடனோ உயர் மின் அழுத்த கம்பிகளின் மீது அசால்ட்டாக நடந்து ட்ரான்ஸ்பார்மர் இருந்த பக்கம் சென்றுள்ளார்.

சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களுக்கும், போலீஸுக்கும் அந்த திருடன் டேக்கா காட்டிய நிலையில் கடைசியாக போலீஸார் மின்சார கம்பிகளை ஆட்டியதால் நிலைதடுமாறி கம்பியை பிடித்து திருடன் தொங்கியுள்ளான். உடனே அவனது கால்களை கட்டி கீழே இறக்கி கைது செய்துள்ளனர் போலீஸார். ஒரு மணி நேரமாக ஆபத்தான ட்ரான்பார்மர் அருகே மின்சார கம்பிகளில் திருடன் செய்த சாகச செயல் அப்பகுதியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K