1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (09:00 IST)

இந்தியா தப்பித்த கொலையாளி; துப்பு கொடுத்தால் ரூ.5 கோடி! – ஆஸ்திரேலியா அதிரடி!

rajwinder singh
ஆஸ்திரேலிய பெண்ணை கொன்றுவிட்டு இந்தியா தப்பி சென்ற நபரை பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.5 கோடி சன்மானம் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா போலீஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் இன்னிஸ்பெயில் என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவ பணியாளராக பணியாற்றி வந்தவர் இந்தியாவை சேர்ந்த ராஜ்விந்தர் சிங்.

ஆஸ்திரேலிய போலீஸாரின் ஆவணங்களின்படி இவர் 38 வயதுடைய ஆஸ்திரேலிய பெண் ஒருவரை குயின்ஸ்லாந்து கடற்கரையில் கொன்றதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக போலீஸார் அவரை தேடி வந்த நிலையில் அவர் தனது குடும்பத்தோடு அங்கிருந்து தப்பியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக அவரை ஆஸ்திரேலிய போலீஸார் தேடி வருகின்றனர்.


ராஜ்விந்தர் சிங் ஆஸ்திரேலியாவில் அளித்திருந்த பணி ஆவணங்களின்படி அவர் பஞ்சாபில் உள்ள பட்டர் காலான் என்ற பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவின் சிபிஐயுடன் இணைந்து ஆஸ்திரேலிய பெடரல் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜ்விந்தர் சிங் குறித்து சரியான துப்பு தருபவர்களுக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5.25 கோடி) சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் குற்றவாளியை பிடிப்பதற்காக அறிவிக்கப்பட்ட ரிவார்ட் தொகையிலேயே மிகவும் அதிகமான தொகை இதுதான் என கூறப்படுகிறது.

Edited By Prasanth.K