செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல்: விவரம் உள்ளே...
மத்திய அரசு செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரம் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஒரே நாடு ஒரே வரி என்பதை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி திட்டத்தை அமல்படுத்தியது.
ஜிஎஸ்டி திட்டத்தை பலர் எதிர்த்து வந்தாலும் இது ஒரு சட்டமாக அமல்படுத்தப்பட்டுவிட்டதால் அனைவரும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, செப்டம்பர் மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் தற்போது வெளியாகி உள்ளது. அதில், செப்டம்பர் மாதத்தில் ரூ,92,150 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் அனைத்தும் சுமார் 42.91 லட்சம் நிறுவனங்களிமிருந்து வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.