ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (18:52 IST)

திங்கட்கிழமையும் ஸ்பெஷல் காட்சி: மெர்சலாகும் மெர்சல் வசூல்

இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் முதல் இரண்டு நாட்கள் நல்ல வசூலை கொடுத்தாலும் மூன்றாவது நாளில் கொஞ்சம் வசூல் குறைந்தது. ஆனால் தமிழிசை மற்றும் எச்.ராஜா புண்ணியத்தில் வெள்ளிக்கிழமை மாலை காட்சி முதல் இன்று வரை பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.



 
 
இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் இயங்கவுள்ள நிலையில் நாளையும் பல திரையரங்குகள் ஸ்பெஷல் காட்சி திரையிடப்படுகிறது.
 
ரிலீஸ் ஆன பின்னர் வார விடுமுறைக்கு பின்னர் திங்கட்கிழமை அன்று ஸ்பெஷல் காட்சி ஓடியது கபாலி மற்றும் வேதாளம் ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே. தற்போது இந்த வரிசையில் விஜய்யின் 'மெர்சலும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.