தெலங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை
தெலங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்த ஞானேந்திரன் பிரசாத் என்பவர் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் அம்மாநிலத்தின் முக்கிய பாஜக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.,
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்விசிறியில் இருந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் அவர் கைப்பட எழுதி வைத்த கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலுடன் இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது