வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (15:04 IST)

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நடிகை மருத்துவமனையில் இருந்து திடீர் மாயம்!

divyabharathi
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நடிகை மருத்துவமனையில் இருந்து திடீர் மாயம்!
திண்டுக்கல் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திவ்யபாரதி என்ற நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மாயமானார்.
 
துணை நடிகை திவ்யபாரதி மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 
30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக யூடியூப் சேனல் நடத்திவரும் பகலவன் என்பவர் துணை நடிகை திவ்யபாரதி மீது புகார் அளித்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த திவ்யபாரதி,  பகலவன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்
 
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து பகலவன் தனத் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆடியோ வெளியிட்ட நிலையில் நடிகை திவ்யபாரதி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவர் திடீரென மாயமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது