ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (16:11 IST)

பா.ஜ.க. எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் மட்டும் வளர முடியாது: வைகோ

Vaiko
பாஜக எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் மட்டும் வளர முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்
 
திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்
 
அப்போது நல்லக்கண்ணு பெருமை குறித்து பேசிய அவர் பாஜக குறித்து தனது கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தார்
 
திமுக மீதான தோள் கொடுக்கும் தோழமை தொடர்ந்து வளரும் என்றும் பாஜக எங்கு வளர்ந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வளர முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தோழமை கட்சிகள் ஒன்றாக இணைந்து எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் இந்த ஒற்றுமையை பலப்படுத்தினால் தமிழகத்தில் பாஜக தலையெடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
 
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக தலை காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்றும் ஆலயம் குறித்து பேசுகிறார்கள் என்றும் ஆலயங்கள் நமக்கு விரோதிகள் அல்ல என்றாலும் பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்