பெண் கலெக்டரை கையை பிடித்த இழுத்த எம்.எல்.ஏ கைது
தெலுங்கானா மாநிலத்தில் பெண் கலெக்டர் ஒருவரை கையை பிடித்து இழுத்த எம்.எல்.ஏ அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகேயுள்ள மகாபூபாத் என்ற மாவட்டத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் எம்எல்ஏ சங்கர் நாயக் மற்றும் பெண் கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் இருவருக்கும் திடீரென ஒரு பிரச்சனையில் விவாதம் நடந்ததாகவும், இந்த விவாதம் முற்றியதை அடுத்து பெண் கலெக்டரின் கையை பிடித்து எம்.எல்.ஏ இழுத்ததாகவும் தெரிகிறது. இந்த காட்சிகளை அங்கிருந்த தொலைக்காட்சிகள் ஒளிபரப்பீயதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பெண் கலெக்டர், எம்.எல்/ஏ சங்கர் நயக் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏவை போலீசார் கைது செய்தனர். ஆனால் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் அவர் ஜாமீன் பெற்று வெளியேறினார். இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு எம்.எல்.ஏ சங்கருக்கு முதல்வர் சந்திரசேகர ரவ் எச்சரிக்கை கடிதம் ஒன்'றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.