திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (01:52 IST)

சரக்கு அடிக்க போறீங்களா? அதுக்கும் இனி ஆதார் வேண்டும்,

ஹைகிளாஸ் மதுபான கடை என்று அழைக்கப்படும் பப்'புகளுக்கு செல்வது இன்றைய உயர்மட்ட நபர்களுக்கு வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஐடி துறையில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டம் பப்புகளில் நிறைந்திருக்கும்



 
 
இந்த நிலையில் இனிமேல் பப்புகளுக்கு செல்ல ஆதார் அட்டை கட்டாயம் என தெலுங்கானா அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முதல்கட்டமாக இந்த உத்தரவை ஐதராபாத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், படிப்படியாக இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்த சுற்றறிக்கை ஒன்று ஐதராபாத்தில் உள்ள அனைத்து பப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பப் நிர்வாகிகள் உள்ளே வரும் வாடிக்கையாளர்களிடம் ஆதார் அட்டையை சரிபார்த்து, அவர்களின் ஆதார் எண்களை குறித்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.