வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (11:57 IST)

தெலுங்கானா மக்களுக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி! – தமிழிசை ட்வீட்!

தமிழகத்தில் சிக்கிக்கொண்ட தெலுங்கான மக்கள் ஊர் திரும்ப உதவியதற்கு நன்றி தெரிவித்துள்ளார் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநில எல்லைகள் மூடப்பட்ட நிலையில் வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றவர்கள் அங்கேயே சிக்கிக் கொள்ள நேர்ந்தது. தெலுங்கானாவிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த பயணிகள் சிலர் திரும்ப ஊருக்கு செல்ல முடியாமல் தமிழகத்தின் நாங்குநேரி பகுதியில் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் பயணிகளை தெலுங்கானா அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசிடம் வலியுறுத்தினார். அதன்படி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு பயணிகள் மீண்டும் தெலுங்கானா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தது.

இதுகுறித்து ட்விட்டர் மூலமாக நன்றி தெரிவித்துள்ள தெலுங்கானா ஆளுனர் “தெலுங்கானா கவர்னர் அவர்களின் கோரிக்கையை ஏற்று தெலுங்கானா மக்களுக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி...” என்று தெரிவித்துள்ளார்.