திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 14 மே 2020 (15:48 IST)

ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வா?

தற்போதைக்கு ஆம்னி பேருந்துகளில் பயண கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் வேலை இன்றி வருமானமின்றி உள்ளனர் என்பதும் இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்திருப்பது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிக்கலில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக ஆம்னி பேருந்துகளில் பயண கட்டணம் இரு மடங்காக உயர்கிறது என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அப்சல் என்பவர் தெரிவித்துள்ளதாக் செய்திகள் பரவியது.
 
ஏற்கனவே அரசு பேருந்துகளின் கட்டணத்தை விட ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் இரு மடங்காக இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் இரு மடங்கு கட்டணம் உயர்கிறது என்ற தகவல் பயணிகள் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பிறகே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் தற்போதைக்கு கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொது முடக்கத்துக்குப் பின் ஆம்னி பேருந்துகளை இயக்குவது பற்றி இதுவரை வழிகாட்டு நெறிமுறைகளை கூறவில்லை எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.