திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (13:39 IST)

தேசிய அரசியலில் கால் வைக்கும் சந்திரசேகர் ராவ்!? – இந்த மாதம் புதிய கட்சி?

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தேசிய அரசியலில் நுழைய புதிய தேசிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்து வருகிறார். 2014 முதலாக தொடர்ந்து தெலுங்கானாவின் முதல்வராகவும் சந்திரசேகர் ராவ் இருந்து வருகிறார்.

தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தேசிய கட்சிகளாக இருந்து வருகின்றன. ஆனால் சமீபத்தில் பாஜக தேசிய அளவில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம் காங்கிரஸ் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு மாநிலத்திலும் வெற்றி பெறவில்லை. இது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர்கட்சி ஒன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாநில கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது.

இதனால் பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகள் இணைந்து புதிய தேசிய கட்சியை உருவாக்கலாம் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தேசிய கட்சி ஒன்றை உருவாக்கும் முனைப்பில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உத்வேகத்தில் இந்த மாதமே அந்த கட்சி தொடங்கப்படலாம் என்றும், கட்சியின் பெயர் “பாரதிய ராஷ்டிரிய சமிதி” என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.