1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 மே 2022 (15:15 IST)

கேஜிஎஃப்2 பார்த்து சிறுவன் செய்த விபரீதம்! – தெலுங்கானாவில் பரபரப்பு!

சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் சாப்ட்டர் 2 படத்தை பார்த்து சிறுவன் செய்த விபரீத செயல் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி யஷ் நடித்த படம் கேஜிஎஃப் 2. சமீபத்தில் வெளியான இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியானது.

இந்நிலையில் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள 15 வயது சிறுவன் ஒருவன் கேஜிஎஃப்2 வை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பார்த்து வந்துள்ளான், அதில் நடித்துள்ள யஷ்ஷால் ஈர்க்கப்பட்ட அந்த சிறுவன் சிகரெட் புகைத்துள்ளான். ஒரு முழு சிகரெட் பாக்கெட்டையும் ஒரே மூச்சாக புகைத்ததால் மூச்சு முட்டிய சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் டாக்டர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து சிறுவனை காப்பாற்றியுள்ளனர். திரைப்படத்தினால் ஈர்க்கப்பட்டு சிறுவர்கள் இதுபோன்ற போதைக்கு அடிமையாவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், நடிகர்களும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.