புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (22:15 IST)

ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்: பிரபல நடிகை நேரில் ஆதரவு

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராகவும் மாணவர்கள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் என்று கூறப்படும் ‘கான்’ நடிகர்கள் கூட வாயை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் தைரியமாக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்தான் பிரபல தமிழ், இந்தி நடிகையான டாப்சி ஆவார்
 
நேற்று ஜேஎன்யூ மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து மாணவர்கள் இன்று காலை முதல் மும்பையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான நடிகை டாப்சி போராட்ட களத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை மாணவர்களுக்கு வழங்கினார். நடிகை டாப்சியுடன் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப், தியா மிர்சா உள்ளிட்டோர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது