ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் இப்போது சிபிஎஸ்இ முதலாளிகள்.. திமுகவை தாக்கும் ஹெச்.ராஜா
அன்று ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களெல்லாம் தற்போது சிபிஎஸ்இ பள்ளி முதலாளிகள் என ஹெச்.ராஜா திமுகவை விமர்சித்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த பல மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ”ஜே.என்.யூவில் இடது சாரிகள் நடத்திய முகமூடி நாடகத்தை தமிழக மாணவர்கள் நம்பி யாரும் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ”திக மற்றும் திமுக ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை நடத்தியபோது மாணவனாக பார்த்தவன் நான். இன்று அவர்கள் சிபிஎஸ்இ பள்ளி முதலாளிகள்” என விமர்சித்துள்ளார்.