செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (13:45 IST)

”பல விமர்சனங்களை தாங்கிக்கொண்டேன்”… தமிழிசை நெகிழ்ச்சி

தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நெகிழ்ச்சியாக பேட்டியளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக திகழ்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதவி கிடைத்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

மேலும், அந்த பேட்டியில், தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிவரும் உருவ கேலிகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து, “விமர்சனங்களை தாங்கிக்கொண்டால், விமரிசையாக வழலாம் என்பதற்கு நான் ஒரு உதாரணம்” என கூறியுள்ளார்.